ஜி.எஸ்.டி. குறித்த தகவல்கள் மற்றும் விளக்கங்களை அறிவதற்காக மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் பிரத்யேக வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜிஎஸ்டி எனப்படும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு, நேற்று நள்ளிரவு அறிமுகமானது. இந்நிலையில் மக்களின் சந்தேகங்கள் மற்றும் ஜிஎஸ்டி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு வலைதளத்தை உருவாக்கியுள்ளது. இதில் ஜி.எஸ்.டி.குறித்த முழுமையான தகவல்கள் இடம் பெற்றிருக்கும் என பத்திரிகை தகவல் மையம் தெரிவித்துள்ளது. www.gst.gov.in, www.cbec.in என்ற தளத்திலும் ஜி.எஸ்.டி.குறித்த தகவல்கள் இடம் பெற்றிருக்கும் என மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் தெரிவித்துள்ளது.