\
நவம்பர் 2020-ல் ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1,04,963 கோடி!

நவம்பர் 2020-ல் ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1,04,963 கோடி!

நவம்பர் 2020-ல் ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1,04,963 கோடி!
Published on

நடப்பு ஆண்டின் நவம்பர் மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) 1,04,963 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் தொகையில், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூ.19,189 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூ.25,540 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ரூ.51,992 கோடியும் (சரக்குகளின் இறக்குமதியின் மூலம் பெறப்பட்ட ரூபாய் 22,078 கோடி உட்பட), செஸ் வரி ரூ.8,242 கோடியும் (சரக்குகளின் இறக்குமதியின் மூலம் பெறப்பட்ட ரூபாய் 809 கோடி உட்பட) அடங்கும்.

ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து வழக்கமான பைசல் தொகையாக மத்திய சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூ.22,293 கோடியையும் மாநில சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூ.16,286 கோடியையும் அரசு வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தின் வருவாய் 1.4 சதவீதம் உயர்ந்துள்ளது என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com