புதிய உச்சம்: ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.41 லட்சம் கோடி!

புதிய உச்சம்: ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.41 லட்சம் கோடி!
புதிய உச்சம்: ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.41 லட்சம் கோடி!

ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. ரூ.1.41 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வசூல் இருக்கிறது. இதில் சிஜிஎஸ்டி வசூல் ரூ.27,837 கோடியாக இருக்கிறது. எஸ்ஜிஎஸ்டி ரூ35,621 கோடியாக இருக்கிறது. ஐஜிஎஸ்டி ரூ.68,481 கோடியாக இருக்கிறது.

கடந்த ஆறு மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த மார்ச் மாத ஜிஎஸ்டி வசூலை விட ஏப்ரல் மாதத்தில் 14 சதவீதம் வசூல் உயர்ந்திருக்கிறது.

தொடர்ந்து ஏழு மாதங்களாக ரூ.1 லட்சம் கோடிக்கு மேலே ஜிஎஸ்டி வசூல் இருக்கிறது. தவிர, ஜிஎஸ்டி தொகை தொடர்ந்து ஏறுமுகத்திலே இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

கடந்த ஆறு மாத ஜிஎஸ்டி வசூல்:

  • மார்ச் 2021 - ரூ.1.23 லட்சம் கோடி
  • பிப்ரவரி 2021 - ரூ1.13 லட்சம் கோடி
  • ஜனவரி 2021 - ரூ.1.19 லட்சம் கோடி
  • டிசம்பர் 2020 - ரூ.1.15 லட்சம் கோடி.
  • நவம்பர் 2020 - ரூ.1.04 லட்சம் கோடி.
  • அக்டோபர் 2020 - ரூ.1.05 லட்சம் கோடி

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com