29 கைவினைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு

29 கைவினைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு

29 கைவினைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு
Published on

டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் 29 கைவினைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்களிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 25-ஆவது கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் 29 கைவினைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்களிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 49 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது .பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஜிஎஸ்டி வரியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் வரும் 25ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 200 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com