வணிகம்
ஜிஎஸ்டி எதிரொலி: செல்போன்களுக்கு 10 சதவீத சுங்க வரி விதிப்பு
ஜிஎஸ்டி எதிரொலி: செல்போன்களுக்கு 10 சதவீத சுங்க வரி விதிப்பு
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்களுக்கு 10 சதவீத அடிப்படை சுங்க வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன் உதிரிபாகங்கள், சார்ஜர்கள் மற்றும் ஹெட்செட்டுகளுக்கும் 10 சதவீத சுங்க வரி விதிக்கப்படும் என்றும், இந்த வரி விதிப்புமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில் செல்போன்களுக்கு சுங்க வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம், செல்போன் சர்க்யூட் போர்டு (PCBA), கேமிரா மாடுல் (Camera Module) டச் பேனல் (Touch Panel) உள்ளிட்ட செல்போன்களின் குறிப்பிட்ட உதிரிபாகங்களுக்கு தற்போதுள்ள அடிப்படை சுங்க வரி விலக்கு தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.