\
ஜி.எஸ்.டி எதிரொலி: ரூ.4,150 வரை குறையும் டிவிஎஸ் டூவீலர்கள்!

ஜி.எஸ்.டி எதிரொலி: ரூ.4,150 வரை குறையும் டிவிஎஸ் டூவீலர்கள்!

ஜி.எஸ்.டி எதிரொலி: ரூ.4,150 வரை குறையும் டிவிஎஸ் டூவீலர்கள்!
Published on

முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான டிவிஎஸ் மோட்டார், அனைத்து இருசக்கர வாகன மாடல்களின் விலையையும் ரூ.4,150 வரை குறைத்திருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பு குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விலை குறைப்பு ரூ.350 முதல் ரூ.1500 வரை வரம்பில் வைக்கப்பட்டுள்ளது. எனினும் பிரீமியம் பிரிவு வாகனங்களின் ஒவ்வொரு மாநிலத்தின் விலையை பொறுத்து ரூ.4,150 வரை வாகனங்களின் விலை குறைக்கப்படுகிறது" என்று கூறியுள்ளது.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை, ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்த பின், ஹீரோ மோட்டார் கார்ப் மாருதி சுசுகி, டொயோட்டா மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் போன்ற வாகன நிறுவனங்களும் வாகன விலையை குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com