6 மாதங்களுக்குபின், ஜிஎஸ்டி வசூல் செப்டம்பரில் ரூபாய் 95,480 கோடியாக உயர்வு

6 மாதங்களுக்குபின், ஜிஎஸ்டி வசூல் செப்டம்பரில் ரூபாய் 95,480 கோடியாக உயர்வு
6 மாதங்களுக்குபின், ஜிஎஸ்டி வசூல் செப்டம்பரில் ரூபாய் 95,480 கோடியாக உயர்வு

கடந்த செப்டம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் 95,480 கோடியாக உயர்ந்துள்ளது, மார்ச் 2020 இல் கோவிட்-19 பொதுமுடக்கத்திற்கு பின்னர் அதிகம் ஜிஎஸ்டி வசூலானது கடந்த மாதத்தில்தான்.

மொத்த ஜிஎஸ்டி வருவாயாக செப்டம்பர் மாதத்தில் அரசு ரூ .95,480 கோடியை வசூலித்ததாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது, பொருளாதார மேம்படுவதன் அறிகுறியாக இது உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தை விட 4 சதவீதம் அதிகம். செப்டம்பர் மாதத்தில் பொருட்களின் இறக்குமதியின் வருவாய் 102 சதவீதமாகவும், உள்நாட்டு பரிவர்த்தனையின் வருவாய் 105 சதவீதமாகவும் இருந்தது.

மொத்த வசூலில், சிஜிஎஸ்டி ரூ .17,741 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ .23,131 கோடி, ஐஜிஎஸ்டி ரூ .47,484 கோடி, செஸ் ரூ .7,124 கோடி வசூலாகியுள்ளது. மேலும், ஐஜிஎஸ்டியிலிருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ .21,260 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ .16,997 கோடியும் வழக்கமான தீர்வாக அரசு நிர்ணயித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த மாதத்தில் வழக்கமான தீர்வுக்குப் பிறகு மத்திய அரசும் மாநில அரசுகளும் ஈட்டிய மொத்த வருவாய் சிஜிஎஸ்டிக்கு ரூ .39,001 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ .40,128 கோடியாகவும் உள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 32,172 கோடி, மே மாதத்தில் 62,151 கோடி, ஜூன் மாதத்தில் 90,917 கோடி, ஜூலை மாதம் 87,422 கோடி, ஆகஸ்டில் 86,449 கோடி.யாக இருந்தது. செப்டம்பர் மாத வசூல் ஆகஸ்ட் மாதத்தை விட 10.4% அதிகமாக இருந்தது எனவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com