பழைய மொபைல் ஃபோன்களை கொடுத்து விட்டு புதிய மொபைல் ஃபோன் வாங்கும் வசதி, ஜூலை 1ம் தேதி முதல் நிறுத்திக்கொள்ளப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள ஜிஎஸ்டி நடைமுறை, மொபைல்ஃபோன் பரிமாற்றத்திற்கு சாதகமற்ற வகையில் இருப்பதுதான் இதற்கு காரணம் எனத் தெரிகிறது. பழைய ஃபோனை 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டு 10 ஆயிரம் ரூபாய்க்கு புது ஃபோனை வாங்கும் பட்சத்தில், தற்போது வித்தியாசத் தொகையான 8 ஆயிரம் ரூபாய்க்குதான் மதிப்பு கூட்டு வரி விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஜிஎஸ்டியில் புதிய ஃபோன் விலையான 10 ஆயிரம் ரூபாய்க்கும் வரி விதிக்கப்படும் என்றும் இது விற்பனையாளருக்கு லாபகரமாக இருக்காது என்றும் EY INDIA நிறுவனத்தை சேர்ந்த மறைமுக வரி நிபுணர் தெரிவித்துள்ளார்.