சென்னை: படிப்படியாக உயர்ந்து வரும் தங்கம் விலை

சென்னை: படிப்படியாக உயர்ந்து வரும் தங்கம் விலை
சென்னை: படிப்படியாக உயர்ந்து வரும் தங்கம் விலை

சென்னையில் தங்கத்தின் விலை இன்று ஏற்றம் கண்டுள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வெள்ளிக்கிழமை கடும் சரிவைக் கண்டு  34,784 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், அதனைத்தொடர்ந்து தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

அதன்படி சனிக்கிழமை 35,008 ரூபாய்க்கும், திங்கட்கிழமை 35,160 ரூபாய்க்கும், செவ்வாய்க் கிழமை 35,312 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று தங்கத்தின் விலை உயர்ந்து 35,336 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

24 கேரட் சுத்த தங்கத்தின் விலை நேற்று முன் தினம் சவரனுக்கு 38,232 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று 38,384 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று 38,408 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை நேற்றுமுன் தினம் 4,395 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று 4,414 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை நிலவரத்தை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி 74,400 ரூபாய்க்கும் ஒரு கிராம் தங்கம் 7 4ரூபாய் 40 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com