100 பில்லியன் டாலர் மதிப்பிலான செல்போன் ஏற்றுமதி... மத்திய அரசு அனுமதி

100 பில்லியன் டாலர் மதிப்பிலான செல்போன் ஏற்றுமதி... மத்திய அரசு அனுமதி
100 பில்லியன் டாலர் மதிப்பிலான செல்போன் ஏற்றுமதி... மத்திய அரசு அனுமதி

மத்திய அரசால் அண்மையில் அறிவிக்கப்பட்ட தற்சார்பு இந்தியா திட்டத்தின்படி, வரும் ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர் (ரூ. 7.3 லட்சம் கோடி) மதிப்புள்ள செல்போன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய ஐபோன் வடிவமைப்பாளரான பாக்ஸ்கான், பெகட்ரான் மற்றும் விஸ்ட்ரான் மற்றும் சாம்சங்க், கார்பன், லாவா, டெக்ஸான் போன்ற நிறுவனங்களில் இருந்து ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் வந்துள்ளன.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி மதிப்புள்ள செல்போன் தயாரிப்பிற்குத் தேவையான உதிரிப் பாகங்களை ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ் எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளின் உற்பத்தியைப் பெருக்கும் நடவடிக்கையாக அது பார்க்கப்படுகிறது.

இந்த வளர்ச்சி நாட்டின் ஏற்றுமதிக்கும் வேலைவாய்ப்புக்கும் பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது. எலெக்ட்ரானிக் பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம் 12 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் 3 லட்சம் நேரடியாகவும் 9 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்க ஆப்பிள் மற்றும் சாம்சங்க் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ் ஆப்பிளின் செல்போன் அசெம்பிள் செய்யும் நிறுவனங்கள் ஐபோன் 11 மற்றும் ஐபோன் எஸ்இ ஆகியவற்றை இந்தியாவிலேயே தயாரிக்கத் தொடங்கியுள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com