
ஜூலை மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கும் வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்குமான அவகாசம் வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்துக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யவும், வரித்தொகையை செலுத்தவும் இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஏராளமானோர் ஜிஎஸ்டியின் வலைத்தளத்திற்குள் நுழைந்ததால் அது சில மணி நேரங்களிலேயே செயலிழந்தது. இதனால் கணக்கு தாக்கல் செய்வதிலும், வரித்தொகை செலுத்துவதிலும் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக கணக்கு தாக்கல் செய்யவும், வரித்தொகையை செலுத்தவும் கெடுவை மேலும் 5 நாட்கள் நீட்டித்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி 25-ம் தேதிதான் கடைசி நாள்.