\
கூகுளின் மடக்கக்கூடிய பிக்ஸல் ஸ்மார்ட்போன் : வெளியானது புதிய தகவல்..!

கூகுளின் மடக்கக்கூடிய பிக்ஸல் ஸ்மார்ட்போன் : வெளியானது புதிய தகவல்..!

கூகுளின் மடக்கக்கூடிய பிக்ஸல் ஸ்மார்ட்போன் : வெளியானது புதிய தகவல்..!
Published on

கூகுள் நிறுவனம் தங்களது 3 புதிய பிக்ஸல் ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டில் வெளியிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் நிறுவனம் தங்களது ஸ்மார்ட்போன்களை பிக்ஸல் சீரியஸில் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டில் பிக்ஸல் 4ஏ மற்றும் பிக்ஸல் 4ஏ 5ஜி ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதவிர அடுத்த ஆண்டில் பிக்ஸல் 5 ஸ்மார்ட்போன் வெளியாகும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் அடுத்த ஆண்டின் 4வது காலாண்டில் 3 புதிய பிக்ஸல் ஸ்மார்போன்களை கூகுள் நிறுவனம் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த போன்களுக்கு தற்போது ரவென், ஓரியோல் மற்றும் பாஸ்போர்ட் என மாதிரிப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.  ஆனால் இந்தப் பெயர்கள் பிக்ஸல் 6, பிக்ஸல் 6 எக்ஸ்எல் மற்றும் மடக்கக்கூடிய பிக்ஸல் ஸ்மார்ட்போன் என தெரியவந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com