இதுதான் சாதகமான சூழல்..? தங்கம் விலை குறைய வாய்ப்பு?
காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 90 ரூபாய் குறைந்து, 8,310 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 720 ரூபாய் குறைந்து, 66,480 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 103 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தங்கம் விலை மேலும் சரியும் என்று அமெரிக்க பங்குச்சந்தை நிபுணர் ஜான் மில்ஸ், தங்கம் விலை 38% குறையும் என்று தெரிவித்தார். ஆனால் குறைய வாய்ப்பில்லை என்று தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் சாந்தகுமார் தெரிவிக்கிறார்.
டாலர் மதிப்பு வீழ்ச்சி அடையும் என்பதால் தங்கத்தில்தான் அனைவரும் முதலீடு செய்வார்கள் என்பதால் தங்கத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டேதான் இருக்கும் என்று கூறும் தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் சாந்தகுமார்,
தங்கத்தில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் என்கிறார்.