ரூ.90,560 | மீண்டும் மீண்டுமா..? ஒரே நாளில் இருமுறையும் உயர்ந்த தங்கம் விலை!
சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களில் தங்க விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்த நிலையில், இன்று திடீரென கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, சவரனுக்கு ரூ.90,560க்கு விற்பனையாகிறது. இந்த மாற்றம் நகை வியாபாரிகள் மற்றும் முதலீட்டாளர்களிடையே புதிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.
சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்க விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைக் காணும் நிலையில், நேற்று ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.89,440க்கு விற்பனையானது.
ஆனால், இன்று அதே தங்க விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலை நேரம் தொடங்கி தங்க விலை மீண்டும் உயரத் தொடங்கியது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.11,320க்கு விற்பனையாகிறது. இதனால் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,560க்கு சென்றுள்ளது.
கடைசியாக இரண்டு நாட்களில் மட்டும் தங்க விலை பவுனுக்கு ரூ.1,360 வரை குறைந்திருந்த நிலையில், இன்றைய இந்த உயர்வு நகை வியாபாரிகள் மற்றும் முதலீட்டாளர்களிடையே புதிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலையும் அதேபோல அதிகரித்துள்ளது. திருமண காலம் நெருங்கி வருவதால், சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதாக நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், வெள்ளி விலையும் ஏற்றத்தைக் கண்டுள்ளது. காலையில் கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 164 ரூபாயாக இருந்த வெள்ளி, மாலையில் மேலும் ஒரு ரூபாய் உயர்ந்து தற்போது கிராமுக்கு ரூ.165க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்து தற்போது ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
மொத்தத்தில், தங்கம் மற்றும் வெள்ளி இரண்டிலும் விலை ஏற்றம் நிலவுவதால், பொதுமக்கள் “இப்போ வாங்கலாமா... இன்னும் குறையும் என காத்திருக்கலாமா?” என்ற குழப்பத்தில் உள்ளனர்

