தங்கம் விலை உயர்வு
தங்கம் விலை உயர்வுpt web

வரலாறு காணாத அளவு தங்கம் விலை உச்சம்.. சவரன் ரூ.134,400-க்கு விற்பனை!

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் மிகப்பெரிய உச்சத்தை அடைந்துள்ளது..
Published on
Summary

தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இன்று சவரனுக்கு 9,520 ரூபாய் உயர்வு, மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சர்வதேச அரசியல் பதற்றங்கள், பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு மிகப்பெரிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று காலை சவரனுக்கு 9,520 ரூபாய் அதிகரித்து மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

சர்வதேச காரணிகளே தங்கம், வெள்ளி விலையை தீர்மானிக்கின்றன. எப்போதெல்லாம் சர்வதேச அளவில் அரசியல் பதற்றங்கள், பொருளாதார நிச்சயமற்ற சூழல் உருவாகிறதோ, அப்போதெல்லாம் தங்கம் விலை உயர்வது வழக்கம். முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டைப் பாதுகாக்க தங்கத்தில் முதலீடு செய்வதால், அதற்கான தேவை அதிகரித்து விலை உயர்கிறது. வெள்ளி பெரும்பாலும் தொழில் பயன்பாட்டுக்கானது. மின்வாகனம், சோலார் பேனல் தயாரிப்புகளால் வெள்ளிக்கான தேவை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை வேகமாக உயர்வதால், முதலீட்டாளர்கள் தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளியில் முதலீடு செய்யும் போக்கும் உருவாகியுள்ளது.

தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்கோப்புப்படம்

அந்த வகையில், இன்று தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு மிகப்பெரிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று காலை சவரனுக்கு 9,520 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 400 ரூபாய்க்கு (ரூ.1,34,400) விற்பனை செய்யப்படுகிறது.

2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு கிட்டத்தட்ட 15ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை தொடர்ந்து உச்சத்திலேயே விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 425 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டு வருவதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இனி, சாமானியர்கள் நகையே வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com