\
gold
goldpt web

9 மாதங்களில் 25%.. தங்கத்தின் விலை சரிவுக்குக் காரணம் என்ன?

உலகம் முழுவதும் போர் பதற்றமும் பணவீக்கமும் அதிகரித்து வரும் சூழலில், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் விலை கடந்த ஒன்பது மாதங்களில் சுமார் 25 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தத் திடீர் சரிவுக்கான காரணங்கள் என்ன? விரிவாகப் பார்க்கலாம்
Published on: 

உலகம் முழுவதும் போர் பதற்றமும் பணவீக்கமும் அதிகரித்து வரும் சூழலில், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் விலை கடந்த ஒன்பது மாதங்களில் சுமார் 25 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தத் திடீர் சரிவுக்கான காரணங்கள் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.

தங்கம்
தங்கம் web

டெல்லி சந்தையில் 24 காரட் ஆபரணத் தங்கம் பத்து கிராமின் விலை, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி 1 லட்சத்து 70 ஆயிரத்து 305 ரூபாயாக உச்சம் தொட்டிருந்தது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்திய அந்தக் காலகட்டத்தில் உச்சத்திலிருந்த தங்கம் விலை, நவம்பர் 20ஆம் தேதி நிலவரப்படி 1 லட்சத்து 26 ஆயிரத்து 875 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதாவது சுமார் 25 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்தச் சரிவைப் புரிந்து கொள்ள, கடந்த சில ஆண்டுகளில் தங்கம் அடைந்த அசுர வளர்ச்சியைப் பார்க்க வேண்டும். 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் 51 ஆயிரத்து 715 ரூபாயாக இருந்த தங்கம் விலை, 2024ஆம் ஆண்டு 64 ஆயிரத்து 185 ரூபாயாக உயர்ந்து, கடந்த பிப்ரவரியில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. கடந்த நான்கு ஆண்டுகளில் 230 சதவீதம் உயர்ந்த தங்கம் விலை, தற்போதைய சரிவுக்குப் பிறகும் 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 145 சதவீதம் அதிகமாகவே உள்ளது.

தங்கம்
தங்கம்புதிய தலைமுறை

உலகக் தங்க கவுன்சில் தகவலின்படி, ஆண்டுக்குச் சராசரியாக 3,200 டன் தங்கம் தேவைப்படுகிறது. இதில் முதலீட்டுத் தேவை 43 சதவீதமும், நகைத் தேவை 27 சதவீதமும், மத்திய வங்கிகளின் கொள்முதல் 21 சதவீதமும், தொழில்நுட்பப் பயன்பாடு 8 சதவீதமும் உள்ளது. பணவீக்கத்தை ஈடுகட்டும் மதிப்புக் களஞ்சியமாகத் தங்கம் உள்ளதால், பொருளாதார நிச்சயமற்ற காலங்களில் மக்கள் தங்கத்தை நாடுவது வழக்கம்.

ஆனால், தற்போது போர் பதற்றம் இருந்தும் தங்கம் விலை சரிய முக்கியக் காரணம், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தலைவராக பொறுப்பேற்ற கெவின் வார்ஷ், வட்டி விகிதக் குறைப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, கடந்த செப்டம்பரில் வட்டி விகிதத்தை உயர்த்தினார். ஜப்பான் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகளும் வட்டியை உயர்த்தியுள்ளன. இதுவே தங்கத்தின் மீதான ஈர்ப்பைக் குறைத்துள்ளது. எனினும், பெரிய நாடுகளின் அதிகப்படியான கடன் சுமை, பணவீக்கம், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருவது ஆகிய காரணிகள் இன்னமும் வலுவாக உள்ளன.