வணிகம்
அதிகரித்தது ஆபரணத் தங்கத்தின் விலை: இன்றைய விலை நிலவரம்
அதிகரித்தது ஆபரணத் தங்கத்தின் விலை: இன்றைய விலை நிலவரம்
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை 40ஆயிரத்தை நெருங்குகிறது.
உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே உள்ளது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 97ரூபாய் அதிகரித்து 4,970க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 776 ரூபாய் உயர்ந்து, 39,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் உயர்வு கண்டுள்ளது. கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து 73 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனையாகிறது.