தங்கம் விலை ரூ.976 உயர்வு : சவரன் ரூ.42,592க்கு விற்பனை

தங்கம் விலை ரூ.976 உயர்வு : சவரன் ரூ.42,592க்கு விற்பனை

தங்கம் விலை ரூ.976 உயர்வு : சவரன் ரூ.42,592க்கு விற்பனை
Published on

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.976 உயர்ந்து ரூ.42,592 விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பின்னர் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தத்தின் காரணமாக கிடுகிடுவென உயர்வடைந்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் சவரன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது.

இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.976 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.42,592க்கு விற்பனையாகிறது. கிராம் அடிப்படையில் 122 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,324 ஆக விற்பனையாகிறது. இதேபோன்று ஒருகிராம் வெள்ளியின் விலை ரூ.2 உயர்ந்து ரூ.79.20க்கு விற்பனையாகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com