மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை
தங்கத்தின் விலை இன்று மேலும் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையை விட 44 ரூபாய் அதிகரித்து ரூ.3,460-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 352 ரூபாய் அதிகரித்து ரூ.27,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 1-ஆம் தேதி ஒரு சரவன் ஆபரணத் தங்கம் ரூ.26,480-க்கு விற்பனையான நிலையில் இன்று அதாவது வெறும் 5 நாட்களில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.27,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது 5 நாட்களில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,200 அதிகரித்துள்ளது.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பதால், தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.