ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத அளவு ஏற்றம் கண்டு ஒரு சவரன் 32 ஆயிரத்து 500 ரூபாயைத் தாண்டியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 29 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை ஜனவரி 8ஆம் தேதி 31 ஆயிரத்து 432 ரூபாய் என புதிய உச்சம் கண்டது. தொடர்ச்சியாக ஜனவரி 14ஆம் தேதி ஒரு சவரன் 30 ஆயிரத்து 112 ரூபாய் என தங்கம் விலை குறைந்தது.
அடுத்துவந்த நாட்களில் ஏற்றம் கண்ட தங்கத்தின் விலை, பிப்ரவரி 8ஆம் தேதி 31 ஆயிரத்து 184 ரூபாய்க்கும், பிப்ரவரி 20 ஆம் தேதி 31 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், பிப்ரவரி 21ஆம் தேதி 32 ஆயிரத்து 96 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில், ஆபரணத் தங்கம் இன்று முன் எப்போதும் இல்லாத அளவாக ஒரு சவரன் 32 ஆயிரத்து 576 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.