\
சரிந்தது தங்கத்தின் விலை - எவ்வளவு குறைந்தது தெரியுமா?

சரிந்தது தங்கத்தின் விலை - எவ்வளவு குறைந்தது தெரியுமா?

சரிந்தது தங்கத்தின் விலை - எவ்வளவு குறைந்தது தெரியுமா?
Published on

தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 37 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் குறைந்துள்ளது. 

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏறுமுகமாக இருந்தது. நேற்று மாலை ஒரு சவரன் தங்கத்தின் விலை 37 ஆயிரத்து 472 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 496 ரூபாய் தங்கத்தின் விலை குறைந்து, 36 ஆயிரத்து 976 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 62 ரூபாய் குறைந்து நான்காயிரத்து 622 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை சரிவு கண்டுள்ளது. வெள்ளியின் விலை ஒரு கிராம் 66 ரூபாய் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com