\
25,000 ரூபாயை நெருங்குகிறது ஒரு சவரன் தங்கம்..!

25,000 ரூபாயை நெருங்குகிறது ஒரு சவரன் தங்கம்..!

25,000 ரூபாயை நெருங்குகிறது ஒரு சவரன் தங்கம்..!
Published on

ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 25,000 ரூபாயை நெருங்குகிறது.

சென்னையில் இன்று 22‌ காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 11 ரூபாய் விலை குறைந்து 3,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 88 ரூபாய் விலை இறங்கி 24,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமிற்கு 20 காசுகள் விலை குறைந்து 42 ரூபாய் 70 காசுகளுக்கு விற்கப்படுகிறது. புத்தாண்டு தொடங்கியது முதல் தங்கம் சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்தியாவில் திருமண சீசன் தொடங்கியுள்ளதாலும், சர்வதேச சந்தை சூழல்களும் தங்கம் விலையில் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com