\
வரலாறு காணாத உச்சத்தில் தங்க விலை : சவரன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது

வரலாறு காணாத உச்சத்தில் தங்க விலை : சவரன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது

வரலாறு காணாத உச்சத்தில் தங்க விலை : சவரன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது
Published on

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.872 அதிகரித்து ஒரு சவரன் ரூ.40,104க்கு விற்பனையாகிறது.

கொரோனா பாதிப்பால் உலக பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் உலக வர்த்தகத்தில் பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் முதலீட்டாளர்கள் எந்த துறையையும் நம்பாமல், அதிக முதலீடுகளை தங்கத்தில் குவித்து வருகின்றனர். இதன் விளைவாக தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் ரூ.872 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.40,104 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இதுவரை இல்லாத உச்சமாகும். தங்கத்தின் இந்த தொடர் விலை உயர்வால், நடுத்தர மக்களுக்கு அது எட்டாக் கனியாக மாறியுள்ளது. இந்த விலையேற்றும் மேலும் நீடிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com