தங்கம், வெள்ளி விலை உயர்வு !

தங்கம், வெள்ளி விலை உயர்வு !

தங்கம், வெள்ளி விலை உயர்வு !
Published on

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வந்தாலும் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருக்கிறது. இந்நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.4,787க்கு விற்பனையாகிறது. அதன்படி, சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.38,296க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.66.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.66,770க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com