தங்கத்தை அதிகம் நுகர்வு செய்து வருகின்ற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த சூழலில் கொரோனாவினால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை சமாளிக்க உலகளவில் உள்ள முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் பக்கமாக திரும்பியுள்ளது. அதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ள காரணத்தினால் அதன் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு தினந்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது.
வழக்கமாக ஆடி மாதங்களில் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறாத காரணத்தினால் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி இருக்கும் என அந்த துறையை சார்ந்தவர்கள் கூறுவார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக அதற்கு நேரெதிராக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
தற்போதையை நிலவரப்படி 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 5374 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு பவுன் 42992 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. நேற்றைய விலையோடு ஒப்பிட்டு பார்க்கும்போது பவுனுக்கு 400 ரூபாய் அதிகரித்துள்ளது.
கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் ஒரு கிராம் 5037 ரூபாய்க்கும், ஒரு பவுன் தங்கம் 40296 ரூபாய்க்கும் விற்பனையாகி வந்தது குறிப்பிடத்தக்கது.