\
பிப்.12: சென்னையில் சவரனுக்கு 464 ரூபாய் குறைந்த ஆபரண தங்கவிலை

பிப்.12: சென்னையில் சவரனுக்கு 464 ரூபாய் குறைந்த ஆபரண தங்கவிலை

பிப்.12: சென்னையில் சவரனுக்கு 464 ரூபாய் குறைந்த ஆபரண தங்கவிலை
Published on

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 464 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. அதன் படி கடந்த செவ்வாய்க் கிழமை 36,296 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம், அடுத்தடுத்த நாட்களில் 36,176 ரூபாய்க்கும், 36,192 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

அதன் படி சவரனுக்கு 464 குறைந்த தங்கம் 35,728 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை நேற்று 4,524 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 4,466 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு 38,800 ரூபாய்க்கும், கிராமுக்கு 4,850 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 73,300 ரூபாய்க்கும், ஒரு கிராம் வெள்ளி 73.30 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com