குறைந்தது தங்கத்தின் விலை!

குறைந்தது தங்கத்தின் விலை!
குறைந்தது தங்கத்தின் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.34,000-க்கும் கீழ் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.33,904 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதில் இருந்து அதன் விலை குறைந்து வருகிறது. அந்த வகையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தும் தங்கம் விலை இறங்கு முகத்திலேயே காணப்படுகிறது. அந்த வகையில் நேற்றும் தங்கம் விலை குறைந்திருந்தது.

இந்நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.34,000க்கும் கீழ் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 குறைந்து ரூ.4,238க்கு விற்பனையாகிறது. அதன்படி, சவரனுக்கு ரூ.208 குறைந்து ரூ.33,904 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.71.60க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.71,600 விற்பனையாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com