வணிகம்
6 நாட்களில் சவரனுக்கு 960 ரூபாய் குறைந்தது தங்கம்
6 நாட்களில் சவரனுக்கு 960 ரூபாய் குறைந்தது தங்கம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 6 நாட்களில் சவரனுக்கு 960 ரூபாய் குறைந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை, ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் சர்வதேச அம்சங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலை கடந்த மாத துவக்கத்தில் இருந்தே கடுமையாக உயர்ந்தது. ஒரு மாத இடைவெளியில் சவரனுக்கு 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகரித்தது. கடந்த 4-ம் தேதி சவரன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது.
இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 14 ரூபாய் விலை குறைந்து 3 ஆயிரத்து 645 ரூபாய்க்கும், ஒரு சவரன் 112 ரூபாய் விலை இறங்கி 29 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமிற்கு 80 காசுகள் விலை குறைந்து 50 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்படுகிறது.