தங்கத்தின் விலை இன்று மட்டும் சவரனுக்கு ரூபாய் 200 அதிகரித்துள்ளது.
2 லட்சத்திற்கு மேல் தங்கம் வாங்க வேண்டும் என்றால் பான்கார்ட் கட்டாயம் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. அதனால் தங்க விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியபாரிகள் புகார் தெரிவித்திருந்தனர். அதனை ஏற்று தங்கம் வாங்க பான்கார்ட் கட்டாயம் இல்லை என்று சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு பின் தங்க விற்பனையில் நல்ல முன்னேற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் விலை இன்று கணிசமாக அதிகரித்தது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 24 ரூபாய் அதிகரித்து 2 ஆயிரத்து 836 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 200 ரூபாய் உயர்ந்து 22 ஆயிரத்து 688 ரூபாயாக உள்ளது. இதே போல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசு அதிகரித்து 43 ரூபாய் 40 காசுக்கு விற்பனையாகிறது.