மார்ச்.8: சென்னையில் 184 ரூபாய் குறைந்த தங்கம் விலை

மார்ச்.8: சென்னையில் 184 ரூபாய் குறைந்த தங்கம் விலை
மார்ச்.8: சென்னையில் 184 ரூபாய் குறைந்த தங்கம் விலை

சென்னையில் சவரன் தங்கத்தின் விலை 184 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் மாததொடக்கத்தில் சவரன் தங்கத்தின் விலை 34,736 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அடுத்த நான்கு நாட்களில் தங்கத்தின் விலை அதிகளவு குறைந்து 33,472 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த சனிக்கிழமை சவரன் தங்கம் 33,728 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை சவரனுக்கு 184 ரூபாய் குறைந்து 33,544 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை நேற்று 4,216 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 4,193 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 36,672 ரூபாய்க்கும், கிராமுக்கு 4,584 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை  70,400 ரூபாய்க்கும், கிராம் வெள்ளியின் விலை  70 ரூபாய் 40 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com