இந்த 3 விஷயங்கள் நடந்தால், தங்கம் 38% குறையலாம்..!
நேற்று இந்தியா நிம்மதியாய் உறங்கிக்கொண்டிருந்தபோது, டிரம்ப் உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்பை அறிவித்திருக்கிறார். அதன் எதிரொலியாக தங்கம் மீண்டும் உச்சம் தொட்டிருக்கிறது.
ஜான் மில்ஸ் என்கிற அமெரிக்க அனலிஸ்ட் தங்கத்தின் விலை தற்போதைக்கு அதிகரித்தாலும், நீண்ட கால நோக்கில் கணக்கிட்டால் 38% வரை குறையும் என கணித்திருக்கிறார். அதே சமயம், தற்போதைய தங்கத்தின் விலைக்கும், இந்த கணிப்பிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
இந்த மூன்று நிகழ்வுகள் நடந்தால், தங்கத்தின் விலை குறையும் என கணிக்கிறார் மில்ஸ்.
1. தங்கத்தின் விலை அதிகரிப்பதால், தங்கச் சுரங்கங்களில் தங்கம் தோண்டுவது அதிகரிக்கும் என கணிக்கிறார் மில்ஸ்.
2. தங்கத்தின் மீதிருக்கும் இந்த டிமாண்ட் எதிர்காலத்தில் குறைய வாய்ப்பிருக்கிறது. மத்திய வங்கிகளும், முதலீட்டாளர்களும் தங்கத்தில் இப்போது அதிக அளவில் முதலீடு செய்கிறார்கள். அதே சமயம், இந்த முதலீடு மேலும் அதிகரிக்காது என சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு இது குறையலாம் அல்லது இதே அளவில் இருக்கலாமே ஒழிய, முதலீடு அதிகரிக்காது .
3. பொதுவாகவே உச்சம் தொடும் எந்தவொரு விஷயமும் , கீழ் இறங்கும் என்பதே இத்தனை ஆண்டுகால வரலாறு நமக்கு கற்றுத் தந்திருக்கிறது.
ஜான் மில்ஸ் இப்படி கணித்திருந்தாலும், அமெரிக்க வங்கி, கோல்ட்மேன் சேக்ஸ் உள்ளிட்ட பிரபல கணிப்பாளர்கள் தங்கத்தின் விலை குறுகிய காலத்தில் உயரவே வாய்ப்பதிகம் என கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.