சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சிறிய இறக்கம் கண்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 4 ரூபாய் விலை குறைந்து 4,451 ரூபாய்க்கும், ஒரு சவரன் 32 ரூபாய் விலை இறங்கி 35,608 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 60 காசு விலை குறைந்து 67 ரூபாய் 80 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.