“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருக்கும்”- உலக வங்கி கணிப்பு

“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருக்கும்”- உலக வங்கி கணிப்பு

“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருக்கும்”- உலக வங்கி கணிப்பு
Published on

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருக்கும் என உலக வங்கி தனது அறிக்கையில் கணித்துள்ளது. 

பொருளாதாரம் தொடர்பாக உலக வங்கி  ‘Global Economic prospects’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 2019ஆம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 2.6% ஆக இருக்கும் எனக் கணித்துள்ளது. அதேபோல 2020-ஆம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 2.7% ஆக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த அறிக்கை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 7.5 சதவிகிதத்தில் நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளது. அதாவது 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருக்கும் என்று கணித்துள்ளது. 

ஆனால் 2018-ஆம் ஆண்டிற்கான இந்திய பொருளாதார வளர்ச்சி 7.2% இருந்தது என்று அறிக்கை காட்டியுள்ளது. உலக பொருளாதாரத்தில் நிலவும் குறைவான வளர்ச்சிக்கு பல காரணங்களையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி உலகளவில் நிலவும் வர்த்தக தடைகள், நாடுகளின் கடன் சுமைகள் மற்றும் பல வளர்ந்து வரும் நாடுகளில் நிலவும் பொருளாதார சூழல் ஆகியவற்றை காரணமாக அறிக்கை கூறியுள்ளது.

இந்தியாவை பொருத்தவரை 2018ஆம் ஆண்டு இறுதி காலாண்டில் ஏற்பட்ட பொருளாதார சூழல் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை குறைத்தது. அத்துடன் தேர்தல் நேரம் மற்றும் வங்கிகளிடமிருந்த வாராக்கடன் சுமை ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்தலுக்கு பிறகு இந்தியாவில் நிலவும் சூழ்நிலை மற்றும் பண கொள்கை பொருளாதார வளர்ச்சி உயர ஏதுவானதாக இருக்கும் என்று அறிக்கை கூறியுள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com