சமையல் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு: ரூ.785ஆக நிர்ணயம்!

சமையல் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு: ரூ.785ஆக நிர்ணயம்!
சமையல் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு: ரூ.785ஆக நிர்ணயம்!

எண்ணெய் நிறுவனங்கள் ஒரே மாதத்தில் கேஸ் சிலிண்டர் விலையை 75  ரூபாய் உயர்த்தியுள்ளன. 

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் ரூ.75 அதிகரித்து தற்போது சிலிண்டரின் விலை ரூ.785ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், வெங்காயம் வரிசையில் கேஸ் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்

முன்னதாக, 2020 ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்றின் விலை 734 ரூபாயாக இருந்தது. அதற்கு அடுத்த மாதத்திலேயே சிலிண்டரின் விலையானது 734 லிருந்து 881 ரூபாயாக உயர்ந்தது. அடுத்து வந்த மாதங்களில் சிலிண்டர் விலை இறங்குமுகத்தில் காணப்பட்ட நிலையில், மே மாதத்தில் இந்த ஆண்டின் குறைந்த பட்ச விலையாக ஒரு சிலிண்டரின் விலை 569 ரூபாய் 50 காசாக விற்கப்பட்டது.

அடுத்து வந்த மாதங்களில் சிலிண்டர் விலை மாற்றமில்லாமல் காணப்பட்ட நிலையில், சென்ற செப்டம்பரில் சிலிண்டர் ஒன்றின் விலை 610 ரூபாயாகவும், டிசம்பர் ஒன்றாம் தேதி 660 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. டிசம்பர் 15ஆம் தேதி சிலிண்டர் ஒன்றின் விலை 710 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த மாதம் 4ம் தேதி ரூ.25 அதிகரித்து ரூ.735ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ரூ.50 அதிகரித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com