மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்திருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து சிலிண்டர் விலையும் உயர்ந்திருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 432 ரூபாய் 71 காசில் இருந்து 434 ரூபாய் 71 காசாக அதிகரித்துள்ளது. கடந்த 7 மாதங்களில் சிலிண்டரின் விலை எட்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. விமான எரிபொருளின் விலை 8.6 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.