ரஷ்யா மீது G7 நாடுகள் விதித்த தடையால் முடங்கும் நிலையில் குஜராத் வைர வியாபாரம் - பின்னணி இதுதான்!

இந்திய வணிகங்களுக்குச் சொந்தமான சுமார் 26 மில்லியன் டாலர் (ரூ.215 கோடி) மதிப்புள்ள நிதியை, விடுவிக்க வேண்டும் என அமெரிக்காவிடம் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
வைரம், புடின்
வைரம், புடின்ட்விட்டர்

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. பொருளாதாரரீதியாக அந்த நாட்டை மேலும் தனிமைப்படுத்தும் வகையில், ரஷ்யாவில் இருந்து வைரம் இறக்குமதி செய்யவும் தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் மீது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ரஷ்யா போர் புரிந்து வருகிறது.

ட்விட்டர்

அதற்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் உதவியால் உக்ரைனும் பதிலடி கொடுத்துவருகிறது. இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய வைர சுரங்க நிறுவனமான ரஷ்யாவின் அல்ரோசா மீது, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடையை கடந்த ஆண்டு விதித்தன. தவிர, கடந்த மே மாதம் ஹிரோஷிமாவில் நடைபெற்ற G7 தலைவர்கள் உச்சி மாநாட்டிலும், G7 நாடுகள் ரஷ்ய தங்கம் மற்றும் வைரத்துக்கு தடை விதிக்க ஒப்புதல் தெரிவித்தன.

அந்த தடை காரணமாக, குஜராத்தில் வைரத்தொழில் மந்தநிலையில் உள்ளது. மேலும், மேற்கத்திய கட்டுப்பாடுகளால் உள்ளூர் தொழில்துறை நிதி பற்றாக்குறையால் சிக்கித் தவிக்கிறது. இது தொழிலாளர்களின் நலனில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக, ரஷ்ய வைர நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் இந்திய வணிகங்களுக்குச் சொந்தமான துபாயைச் சேர்ந்த கடல்சார் நிறுவனங்களின் சுமார் 26 மில்லியன் டாலர் (சுமார் ரூ.215 கோடி) மதிப்புள்ள நிதியை அமெரிக்க கருவூலம் முடக்கியிருப்பதாகவும், அவற்றை விடுவிக்க வேண்டும் எனவும் அமெரிக்காவிடம் இந்தியா கேட்டுக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 26 மில்லியன் டாலர் மதிப்புள்ள நிதியை, இந்த ஆண்டு தொடக்கத்தில் பொருளாதாரத் தடைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க கருவூலப் பிரிவான வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாடு அலுவலகம் (ofac) முடக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர்

குறிப்பிடப்படாத இந்திய நிறுவனங்களின் UAE-ஐ தளமாக்க் கொண்ட அலகுகள் கரடுமுரடான வைரங்களை வாங்குவதற்கு அவற்றை மாற்ற முயன்றபோது ofac அந்த நிதியை முடக்கியுள்ளது. இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிறுவனங்கள், அனுமதி பெறாத ரஷ்ய நிறுவனங்களுக்காகவோ அல்லது அல்ரோசா மீதான தடைகள் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடைமுறைக்கு வருவதற்கு முன் முடிக்கப்பட்ட ஆர்டர்களுக்காகவோ பணம் செலுத்தப்பட்டதாக அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளன. எனினும் இதற்கு அல்ரோசா, இந்திய வெளியுறவுத் துறை, ofac ஆகிய எதுவும் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் போர் மற்றும் தடைகளுக்குப் பின், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வைரம், 27 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com