கூகுளில் செய்தி வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதி: கூகுள் அறிவிப்பு

கூகுளில் செய்தி வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதி: கூகுள் அறிவிப்பு
கூகுளில் செய்தி வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதி: கூகுள் அறிவிப்பு

உலகம் முழுவதும் இருந்து கூகுள் தளத்தில் செய்திகளை வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதி வழங்‌கப்படும் என அந்நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள‌ அவர், சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை இலவசமாக கூகுளில் விளம்பரம் செய்யலாம். அக்டோபர் நடுப்பகுதியில் இந்த திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதற்காக கூகுள் நியூஸ் ஷோகேஸ் என்ற அமைப்பை உருவாக்கியிருப்பதாகவும், முதலில் ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விரிவுப்படுத்தப்படும் என்றும் சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதுமையான திட்டத்தின் மூலம் தரமான செய்திகளை ‌வழங்கினால் நிச்சயம் நிதி வழங்கப்படும் என்றும் கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com