வணிகம்
பெட்ரோல், டீசல் விலை தீபாவளியின்போது குறையும்: அமைச்சர் தர்மேந்திர பிரதான்
பெட்ரோல், டீசல் விலை தீபாவளியின்போது குறையும்: அமைச்சர் தர்மேந்திர பிரதான்
பெட்ரோல், டீசல் விலை தீபாவளி பண்டிகை சமயத்தில் குறையும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபின் அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதே, நாடு முழுவதும் பெட்ரோல் விலை உயரக் காரணம் என்று தெரிவித்தார். சர்வதேச நிலவரங்கள் பெட்ரோலியப் பொருட்கள் விலையில் பிரதிபலிப்பதாகக் கூறிய அவர், இப்போது அதிகபட்சத்தை கச்சா எண்ணெய் விலை தொட்டுள்ள நிலையில், எதிர்வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறினார்.

