சாம்சங் முதல் சோனி வரை: புத்தாண்டை முன்னிட்டு அதிரடி தள்ளுபடி அறிவிப்பு

சாம்சங் முதல் சோனி வரை: புத்தாண்டை முன்னிட்டு அதிரடி தள்ளுபடி அறிவிப்பு

சாம்சங் முதல் சோனி வரை: புத்தாண்டை முன்னிட்டு அதிரடி தள்ளுபடி அறிவிப்பு

அடுத்த சில நாட்களில் 2022-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளோம். இந்த நிலையில் சந்தையில் மின்னணு தொழில்நுட்ப சாதனங்களை விற்பனை செய்து வரும் முன்னணி நிறுவனங்கள் அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளன. புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த தள்ளுபடி என தெரிகிறது. சோனி, Garmin, டைசன், ரெட்மி மற்றும் பல நிறுவனங்கள் இந்த ஆஃபர்களை அறிவித்துள்ளன.

ரெட்மி!

மொபைல் போன் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழும் ரெட்மி வரும் 21-ஆம் தேதி அன்று ரெட்மி நோட் 11T 5G போனை 15,999 ரூபாய்க்கு வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதே போல 9i போனை 8,499 ரூபாய்க்கும், 9A போனை 6,999 ரூபாய்க்கும் வழங்குவதாக தெரிவித்துள்ளது. மேலும் ரெட்மி இயர்பட்ஸ் 3 ப்ரோ 2,499 ரூபாய்க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சோனி!  

சோனி நிறுவனம் தொலைக்காட்சி, ஆடியோ சிஸ்டம் மற்றும் சில தனது தயாரிப்புகளில் சலுகை வழங்குகிறது. 2000 ரூபாய் வரையிலான கேஷ்பேக், MRP-யில் 30 சதவிகிதம் தள்ளுபடி, சுலபமாத தவணையில் ஒரு மாதம் இலவசம், தேர்ந்தெடுக்கப்பட்ட சில தயாரிப்புகளுக்கு 2 வருடம் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தரப்படுகிறது. சோனி நிறுவனம் ஆடியோ சிஸ்டங்களுக்கும் சலுகைகளை அறிவித்துள்ளது. 

சாம்சங்!

சாம்சங் நிறுவனம் அதிகபட்சம் 20 சதவிகித கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. 990 ரூபாய் முதல் தொடங்கும் சுலபமாத தவணை குறித்த அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன. இது தவிர ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோவேவ், டிஷ்வாஷர், ஹேர் டிரஸ்சர் மாதிரியான பொருட்களை டிசம்பர் 15 முதல் ஜனவரி 26, 2022 வரையில் வாங்கும் வாடிக்கையாளர்களில் 600 பேருக்கு குலுக்கல் முறையில் பரிசு பொருட்கள் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதே போல ஸ்மார்ட் வாட்ச்களை தயாரித்து வரும் Garmin, நுகர்வோர் பயன்பாட்டு ரோபோக்களை தயாரித்து வரும் iRobot நிறுவனம், காற்று சுத்திகரிப்பு எந்திரம் மற்றும் வேக்கம் க்ளீனரை தயாரித்து வரும் டைசன் நிறுவனம் தனது தயாரிப்புகளில் சலுகையை அறிவித்துள்ளன. 

தகவல் உறுதுணை : இந்தியன் எக்ஸ்பிரஸ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com