வரும் 2022 ஜனவரி முதல் உயருகிறது ஓலா மற்றும் உபர் ஆட்டோ சவாரி கட்டணம்

வரும் 2022 ஜனவரி முதல் உயருகிறது ஓலா மற்றும் உபர் ஆட்டோ சவாரி கட்டணம்
வரும் 2022 ஜனவரி முதல் உயருகிறது ஓலா மற்றும் உபர் ஆட்டோ சவாரி கட்டணம்

வரும் 2002 ஜனவரி முதல் ஓலா மற்றும் உபர் ஆட்டோ சவாரி கட்டணம் அதிகமாக இருக்கும் என தெரிகிறது. ஓலா, உபர் மாதிரியான அப்ளிகேஷன்களை பயன்படுத்தி முன்பதிவு செய்யப்படும் ஆட்டோ சவாரிகளுக்கான கட்டணம் உயர முக்கியக் காரணமாக அமைந்துள்ளது மத்திய அரசின் புதிய வரி விதிப்பு நடைமுறை என சொல்லப்படுகிறது.

அதாவது ஆன்லைன் மூலம் ஆட்டோ புக் செய்தால் அதற்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். இந்த ஜி.எஸ்.டி வசூல் நடைமுறை அப்ளிகேஷன் மூலமாக முன்பதிவு செய்யப்படும் ஆட்டோக்களுக்கு மட்டுமே வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசின் இந்த புதிய வரி விதிப்பு திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் அப்ளிகேஷன் மூலம் முன்பதிவு செய்யப்படும் பயணிகளுக்காக ஆட்டோ ஓட்டி வரும் ஆட்டோ ஓட்டுநர்கள். 

“அரசு வருவாய் ஈட்ட வேண்டும் என்பது அவசியமான ஒன்று. அதை மறுப்பதற்கு இல்லை. இருந்தாலும் இந்த வரியினால் ஆட்டோ டிரைவர்களின் வருமானம் பாதிக்கப்படும்” என உபர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார். 

இந்த வரியினால் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் என இரு தரப்புக்கும் இழப்புதான் என சிலர் தெரிவித்துள்ளனர். தற்போது அரசு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் ஆட்டோக்களுக்கு வரி ஏதும் விதிக்கவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com