ஓலாவின் தினசரி செயல்பாடுகளில் இருந்து விலகுகிறார் நிறுவனர் பவிஷ் அகர்வால்

ஓலாவின் தினசரி செயல்பாடுகளில் இருந்து விலகுகிறார் நிறுவனர் பவிஷ் அகர்வால்

ஓலாவின் தினசரி செயல்பாடுகளில் இருந்து விலகுகிறார் நிறுவனர் பவிஷ் அகர்வால்
Published on

ஓலா நிறுவனத்தின் நிறுவனர் பவிஷ் அகர்வால் தினசரி செயல்பாடுகளில் இருந்து விலக இருப்பதாக பணியாளர்களுக்கு எழுதிய மெயிலில் தெரிவித்திருக்கிறார். அதே சமயம் நான் ராஜினாமா செய்யவில்லை. நிறுவனத்தின் வளர்ச்சிக்காக புராடக்ட் மற்றும் இன்ஜினீயரி்ங் பிரிவை கவனித்துக்கொள்ள இருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.

நிறுவனத்தின் நீண்ட கால தேவைக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறேன். தினசரி செயல்பாடுகளை ஓலா குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜிஆர் அருண் கவனித்துக்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜிஆர் அருண் கடந்த ஆண்டு நிறுவனத்தில் இணைந்தார். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிதி மற்றும் ஸ்டாரஜி அனுபவம் மிக்கவர் என பவிஷ் தெரிவித்திருக்கிறார்.



இதற்கு முன்பாக ஓலாவின் இணை நிறுவனர் அன்கித் பாதி, இன்ஜினீயரிங்  பிரிவை கவனித்துவந்தார். இவர் ஓலாவில் இருந்து விலகி வேறு டெக்னாலஜி நிறுவனத்தை தொடங்கினார். அதனால் அந்த பிரிவை கவனித்துக்கொள்ள பவிஷ் திட்டமிட்டிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com