வாடிக்கையாளர்களை வியக்க வைக்கும் ஃப்ளிப்கார்ட் ஆஃபர்!

வாடிக்கையாளர்களை வியக்க வைக்கும் ஃப்ளிப்கார்ட் ஆஃபர்!

வாடிக்கையாளர்களை வியக்க வைக்கும் ஃப்ளிப்கார்ட் ஆஃபர்!
Published on

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அளித்து வந்த அதிரடி ஆஃபர் திட்டம் நாளை முதல் முடிவடைகிறது. 

ஆன்லைன் ஷாப்பிங்கில் தனக்கென தனி இடத்தை பெற்ற ஃப்ளிப்கார்ட் நிறுவனம், தற்போது ’பிக் ஷாப்பிங் சேல்’  என்ற புதிய ஆஃபரை
ஆரம்பித்துள்ளது. டிசம்பர் 7 தொடங்கி டிசம்பர் 9 வரை நடைபெற்று வரும் இந்த சலுகையில் ஸ்மார்ட் போன், டிவி, லேப்டாட் உட்பட அனைத்து
விதமான வீட்டு உபயோக பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இதன் விலை மற்றும் இ,எம்.ஐ யிலும் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி ரூ.1,02,000 மதிப்புமிக்க ஆப்பிள் ஐ போன் எக்ஸ் ரூ.89,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 61,000 மதிப்பிலான கூகுள் பிக்ஸெல்2,
49,999 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. இதே போன்ற பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த ஸ்மார்ட்போன் விலையில் ஆஃபர்கள்
வழங்கப்பட்டுள்ளன. இதனுடன், எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டுகளில் ரூ.5,000 உடனடி தள்ளுபடி, ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளில் 5 சதவிகிதம்
தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த பிக் ஷாப்பிங் சேல் ஆஃபர், நாளை முதல்
நிறைவடைவதால் தற்போது, ஆன்லைனில் வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com