ஃப்ளிப்கார்டின் அதிரடி சேல்!

ஃப்ளிப்கார்டின் அதிரடி சேல்!
ஃப்ளிப்கார்டின் அதிரடி சேல்!

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் தனது வாடிக்கையாளர்களுக்காக குடியரசு தினத்தையொட்டி புதிய சேல் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

புகழ்பெற்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தள்ளுபடி விற்பனையில் ஷாப்பிங் சேல்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது குடியரசு தினத்தையொட்டி புதிய சேல் ஒன்றை துவக்கியுள்ளது. ஜனவரி 21 - 23 நடைபெறும் இந்த சேலில் முன்னணி நிறுவனங்களின் பல ஸ்மார்ட்ஃபோன்கள், லேப்டாப்ஸ், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை அதிரடி விலைக்குறைப்பில் விற்பனை செய்யப்படுகின்றன.இதனுடன், சிட்டிபேங்கின் கிரேடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டை பயன்படுத்துவோர்க்கு 10 சதவீதம் கேஸ்பேக் ஆஃபரும் வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ்:

41,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ் மொபைல், ஃப்ளிப்கார்டின் விலைக்குறைப்பில், ரூ. 35,900 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன், எக்சேன்ஜ் ஆஃபரும் அறிவிக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம், 5.5 ஹெச்டி டிஸ்பிலே, 12 மேகா பிக்செல் கேமரா ஆகியவை சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் ஆகும். 

ஆப்பிள் ஐபோன்7 32ஜிபி: 

ஐபோன் பிரியர்களை கவரும் வகையில்,  ஐபோன் 7 அதன் 49,000 ரூபாயில் இருந்து அதிரடியான விலைக்குறைப்பில் ரூ. 40,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எக்சேன்ஜ் ஆஃபரில் குறைந்தது 18,000 ரூபாய் வரை டிஸ்கோண்ட் விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃப்ளிப்கார்டின் அதிரடியான குடியரசு தின விற்பனையில்,  கூகுள், மைக்ரோசாஃப்ட்  போன்ற பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்ஃபோன்களின் விலை பெருமளவில் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com