பிளிப்கார்ட் ஹைப்பர்லோக்கல் ஆர்டர்கள் ஒரே ஆண்டில் 17% அதிகரிப்பு

பிளிப்கார்ட் ஹைப்பர்லோக்கல் ஆர்டர்கள் ஒரே ஆண்டில் 17% அதிகரிப்பு
பிளிப்கார்ட் ஹைப்பர்லோக்கல் ஆர்டர்கள் ஒரே ஆண்டில் 17% அதிகரிப்பு
ஃபிளிப்கார்ட்டின் ஹைபர்லோக்கல் ஆர்டர்கள், ஒரே ஆண்டில் 17 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஆர்டர்கள் கடந்த ஆண்டை விட 25 மடங்கு அதிகரித்திருப்பதாக ஃபிளிப்கார்ட் நிறுவனம் கூறியுள்ளது.
ஹைபர்லோக்கல் டெலிவரி தளமான ஃபிளிப்கார்ட் குயிக் 2021ஆம் ஆண்டில் வருவாய் மற்றும் வாடிக்கையாளர்களில் இருமடங்கு வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட், டன்சோ, பிளிங்கிட் ஆகிய நிறுவனங்கள் தற்போது 15 முதல் 30 நிமிடங்களுக்குள் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்வதால் இந்நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. மளிகை, காய்கறிகள் மற்றும் பழங்களை விற்கும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கடைகள் ஃபிளிப்கார்ட்டுடன் இணைக்கப்பட்டிருப்பதாகவும், இவற்றின் மூலம் நாடு முழுவதும் 60 லட்சத்துக்கும் அதிகமான டெலிவரிகள் செய்யப்படுவதாகவும் அந்நிறுவனத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் அஜ்மீர், அமிர்தசரஸ், புஜ், டேராடூன், கன்னியாகுமரி உள்பட ஆயிரத்து 800 நகரங்களுக்கு தொழில் விரிவுபடுத்தப்படும் என்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com