50% முதல் 80% வரை சலுகை - இது ஃப்ளிப்கார்ட் திருவிழா

50% முதல் 80% வரை சலுகை - இது ஃப்ளிப்கார்ட் திருவிழா

50% முதல் 80% வரை சலுகை - இது ஃப்ளிப்கார்ட் திருவிழா
Published on

பெங்களூருவை தலைமையகமாகக் கொண்ட இணைய வர்த்தக நிறுவனம் ஃப்லிப்கார்ட், ”ஃப்லிப்கார்ட் ஃபேஷன் டேஸ் (Flipcart Fashion Days)” என்னும் மிகப்பெரிய சலுகை விழாவைத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ஃப்லிப்கார்ட்டின் ஃபேஷன் தலைவரான ரிஷி வாசுதேவ் கூறுகையில், ”இன்று முதல் ஜூன் 18 வரை இந்த சலுகை விழா தொடரும். இந்த ஃப்லிப்கார்ட் ஃபேஷன் டேஸ், ஏரோபோஸ்டில், வெரோ மோடா, அடிடாஸ், க்ராக்ஸ், அண்டர் ஆர்மர் போன்ற 50 பிரபல நிறுவனங்களின் பொருட்களை, 50 முதல் 80 சதவிகிதம் வரை சலுகை விலையில் விற்பனை செய்ய இருக்கிறோம். நாட்டில் இருக்கும் மில்லியன் கணக்கான ஃபேஷன் பிரியர்களை, ஃப்லிப்கார்ட்டை நோக்கி அழைக்கவே இந்த ப்ரத்யேகமாக சலுகையை தொடங்கியுள்ளோம்” என்று கூறியிருக்கிறார்.

இன்னொரு பெரிய ஆன்லைன் நிறுவனமான ”ஷாப்க்லூஸ்” (Shopclues), நாளை முதல் ஒரு வாரத்திற்கு, ஹோம் கிட்சன், மின் உபகரணங்கள், ஃபேஷன் பொருட்கள் ஆகியவற்றுக்கு சலுகைகளை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com