\
ஃப்ளிப்கார்டின் அதிரடி ஆஃபர்கள்

ஃப்ளிப்கார்டின் அதிரடி ஆஃபர்கள்

ஃப்ளிப்கார்டின் அதிரடி ஆஃபர்கள்
Published on

ஃப்ளிப்கார்ட் நிறுவனம், ‘நியூ பின்ச் டேஸ்’ என்ற புதிய ஆஃபர்களை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தில், மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ள ஃப்ளிப்கார்ட் நிறுவனம் ‘நியூ பின்ச் டேஸ்’ என்ற புதிய ஆஃபர் திட்டத்தை அறிமுகப்படுத்தயுள்ளது. டிசம்பர் 15 - 17 என மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த ஆஃபரில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஸ்மார்ட்ஃபோன்களின் விலைகளில் தள்ளுபடிகளை வழங்க உள்ளது.

இதன்படி, சாம்சங், கூகுள் பிக்ஸல், எல்ஜி போன்ற முன்னணி மொபைல்கள் தள்ளுபடி விலையில் வழங்கப்படுகின்றன. இதனுடன் லேப்டாப், கேமராக்கள், மொபைலுக்கு தேவைப்படும் பிற சாதனங்கள் ஆகியவற்றின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. லெனவோ k8 ப்ளஸ் ரூ.10,999 விலையில் இருந்து குறைக்கப்பட்டு ரூ.8,999 க்கு விற்பனையாக உள்ளது. அதேபோல் எல்ஜியின் GS மொபைல் ஃபோன் ரூ.36,990-ல் இருந்து குறைந்து 31,990 ரூபாய்க்கு தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது. சாம்சாங் கேலக்ஸி S7 ஸ்மார்ட்ஃபோன் 46,000 ரூபாயில் இருந்து 24,990-க்கு விற்பனையாக உள்ளது. சமீபத்தில் ஃப்ளிப்கார்ட் அறிவித்திருந்த ‘பிக் ஷாப்பிங் சேல்’ தள்ளுபடி விற்பனை நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து தற்போது ‘நியூ பின்ச் டேஸ்’ என்ற சிறப்பு விற்பனை தொடங்க உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com