\
மீன் வாங்க அதிகரிக்கும் கூட்டம்: விலை அதிகரிப்பு

மீன் வாங்க அதிகரிக்கும் கூட்டம்: விலை அதிகரிப்பு

மீன் வாங்க அதிகரிக்கும் கூட்டம்: விலை அதிகரிப்பு
Published on

புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், கடலூர் மீன் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்து வருவது வழக்கம். புரட்டாசி மாதம் முடிந்து இன்று, முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை 3 மணி முதலே ஆயிரக்கணக்கான மக்கள் மீன் வாங்க குவியத் தொடங்கினர். மீன்கள் வரத்து குறைவால் அனைத்து மீன்களின் விலையும் சற்று உயர்ந்தே காணப்படுகிறது.

முதுநகர் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் சிதம்பரம் சாலையில் சற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் இறைச்சிக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com