2021 ஹோண்டா CB 350 RS பைக் பர்ஸ்ட் லுக் வெளியானது!

2021 ஹோண்டா CB 350 RS பைக் பர்ஸ்ட் லுக் வெளியானது!
2021 ஹோண்டா CB 350 RS பைக் பர்ஸ்ட் லுக் வெளியானது!

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் பிரீமியம் ரக பைக்குகளை சந்தையில் அறிமுகம் செய்வதில் அதிகம் கவனம் செலுத்துகிறது.

ஹார்னெட் 2.0 மற்றும் H'Ness CB 350 ரக பைக்குகளை தொடர்ந்து தற்போது 2021 ஹோண்டா CB 350 RS பைக்கை அறிமுகம் செய்துள்ளது ஹோண்டா நிறுவனம். இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை 1.96 லட்ச ரூபாயாகும். ஸ்போர்ட்டி லுக்கில் பைக்கை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

348.4 சிசி திறன் கொண்ட இன்ஜின் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கின் பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 15 லிட்டராகும். 5 ஸ்பீட் கியர் பாக்ஸ், டியூயல் டிஸ்க் பிரேக், வட்ட நிறத்திலான ஹெட் லேம்ப், LED விளக்குகள், டியூப்லெஸ் டயரும் கொண்டுள்ளது.

நீண்ட தூர பயணத்திற்கு ஏதுவாக இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. RS என்பதன் அர்த்தம் ரோட் சைலிங் என்பது ஆகும். சந்தையில் 350 சிசி ரக பைக்குகளுக்கு இந்த பைக் போட்டியாக இருக்கலாம் எனவும் தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com