\
“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்

“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்

“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்
Published on

நாட்டின் பொருளாதார மந்தநிலையால், வரி விதிப்புகள் சிலவற்றை திரும்பப் பெறும் அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், “ஜி.எஸ்.டி கவுன்சில் உடன் வரும் ஞாயிற்றுக்கிழமை கலந்தாலோசித்து, பணம் திரும்ப செலுத்தும் முறையில் உள்ள சிக்கல்கள் களையப்படும். வரும் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து வரி தொடர்பாக கொடுக்கப்படும் அனைத்து நோட்டீஸ்கள் மீதும், பதில் வந்த மூன்றே மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். 

கடனைத் திரும்ப செலுத்திய 15 நாள்களுக்குள், கடன் வாங்கியவரின் ஆவணங்களை வங்கிகள் திரும்ப ஒப்படைக்க வேண்டும். ஒரே தவணையில் கடனைத் திரும்ப செலுத்தும் முறையில் வெளிப்படைத் தன்மை கொண்டு வந்து, குறு, சிறு, நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கு உதவ வேண்டும். 

நிறுவனங்கள் ஆரம்பிக்க பலரிடம் இருந்து பெறப்படும் பணத்துக்கு வசூலிக்கப்பட்டு வந்த ‘ஏஞ்சல் வரி’ ரத்து செய்யப்படுகிறது. சிறு, குறு நிறுவனங்களுக்கு திரும்ப செலுத்தாமல் நிலுவையில் உள்ள அனைத்து ஜி.எஸ்.டி தொகையும் 30 நாள்களுக்குள் திரும்ப செலுத்தப்படும். வரும் நாட்களில் நிலுவை தொகை 60 நாள்களில் திரும்ப செலுத்தப்படும். பாண்ட் மார்க்கெட் நம் நாட்டில் இன்னும் உறுதிப்படுத்த வேண்டும். 

என்.பி.எஃப்.சி நிறுவனங்களுக்கு அளிப்பதற்கு பொதுத் துறை நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட நிதி வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்குச் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு திரும்ப அளிக்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. 30 நாள்களுக்குள் அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com