\
"டிச.31க்குள் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்க" - வருமான வரித்துறை

"டிச.31க்குள் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்க" - வருமான வரித்துறை

"டிச.31க்குள் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்க" - வருமான வரித்துறை
Published on

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான நீட்டிக்கப்பட்ட அவகாசம் வரும் 31ஆம் தேதி முடிவடைவதாகவும் அதற்குள் உரியவர்கள் வரிக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2020-21ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை இதுவரை 4 கோடி பேர் மின்னணு முறையில் தாக்கல் செய்துள்ளதாகவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 46 லட்சத்து 77 ஆயிரம் பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், கொரோனா சூழலை கருதி அந்த அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com